ஐபிஎல் வரலாற்றில், CSK Vs RCB அணிகளுக்கு இடையேயான மேட்சில், ஜடேஜா மற்றும் கிங் கோலி இருபெரும் சாதனைகள் படைத்தனர். சிஎஸ்கே-வின் ஜடேஜா 3000 ரன்கள், 100 விக்கெட்டுகள் கடந்து சாதனை படைத்தார். கிங் கோலி, சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில், 1084 ரன்கள் விளாசி முதல் இடத்தில் இருக்கிறார். 1057 ரன்களுடன் ஷிகர் தவான், 896 ரன்களுடன் ரோஹித் இரண்டாவது & மூன்றாவது இடத்தை தக்கவைத்துள்ளனர். நேற்று சேப்பாக்கில் நடந்த CSK Vs RCB போட்டியில், ஆர்சிபி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது.