மியான்மர் தீவிர நிலநடுக்கங்களுக்குப் பெயர் பெற்ற ஆல்பைட் பெல்ட் பகுதியில் அமைந்துள்ளது. இதனால் மியான்மரில் ஏற்படும் நிலநடுக்கங்கள் பேரழிவுகளை உண்டாக்குபவையாக உள்ளன. அந்தமான் மெகாத்ரஸ்டின் மற்றும் சாகாங் ஃபால்ட் மண்டலங்களில் உள்ள டெக்டானிக் தட்டுகள் நகர்வதால் மியான்மரில் மீண்டும் மீண்டும் நிலநடுக்கம் ஏற்படக் காரணமாகின்றன. இந்த மண்டலத்தில் உள்ள இந்திய நிலத்தட்டுகள் ஆண்டுக்கு 2–3.5 செ.மீ என்ற விகிதத்தில் நகர்கின்றன. இதன் காரணமாக, சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.