தெலுங்கு, கன்னட மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உகாதி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது வாழ்த்து செய்தியில், திராவிட மொழி குடும்பத்தில் தமிழின் உடன்பிறப்பு மொழிகளான தெலுங்கு, கன்னடம் பேசும் மக்கள் புத்தாண்டாகக் கொண்டாடும் உகாதி திருநாள் நாளை (மார்ச் 30) கொண்டாடப்படுகிறது. தமிழகத்திலுள்ள மொழிச் சிறுபான்மையினரை என்றும் மதித்துப் போற்றி அவர்களின் உற்ற தோழனாய் விளங்குவது திமுக அரசு. மொழி, அரசியல் உரிமைகளைக் காப்பதற்கான ஊக்கத்தை வழங்குவதாக உகாதி திருநாள் அமையட்டும் என கூறியுள்ளார்.