மோகன்லால் நடிப்பில் பிருத்விராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள 'எல்2 எம்புரான்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது படத்தில் உள்ள சில சர்ச்சைக்குறிய காட்சிகளை நீக்க தணிக்கை வாரியம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளை சித்தரிக்கும் காட்சிகளை சுருக்கவும், தேசிய கொடி பற்றிய காட்சியை நீக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்புகள் பற்றிய விமர்சன காட்சிகள் இருப்பதற்கும் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு எழுந்துள்ளது.