இராஜபாளையம்: இரயில் நிலையம் தரம் உயர்வு.. இரயில்வே அமைச்சகம்

82பார்த்தது
விருதுநகர் மாவட்டத்தில், காட்டன் சிட்டி என்றழைக்கப்படும் இராஜபாளையத்தில் நூற்பாலைகள் மற்றும் பேண்டேஜ் துணிகள் அதிகமாக உற்பத்தி செய்யும் இடமாக உள்ளது. இங்கு தினந்தோறும் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் இரயில் மூலம் வந்து செல்கின்றனர். மேலும் பயணிகள் இராஜபாளையம் வழியாக வரும் புதிய இரயில்களுக்கு நல்லாதரவு அளிப்பது மற்றும் வருவாய் அதிகரிப்பது, பயணிகள் பயன்பாடு போன்றவற்றை கருத்தில் கொண்டு இராஜபாளையம் இரயில் நிலையத்தை தரம் உயர்த்தி இரயில்வே அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

ஏற்கனவே இராஜபாளையம் இரயில் நிலையம் NSG- 5 என்ற தரவரிசையில் உள்ளது. தற்போது NSG- 4 என்ற வகைப்பாடு தரவரிசையில் தரம் உயர்த்தி இந்திய இரயில்வே அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. இந்த அறிவிப்பால் இராஜபாளையம் இரயிலில் பயணிப்போர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்திய இரயில்வே அமைச்சகத்திற்கு நன்றியை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி