தமிழ்நாட்டில் தேசிய மருந்து தரக் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ள தரமற்ற 53 வகையான மருந்துகளை பயன்படுத்துவது இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். அவர் கூறுகையில், “இந்தப் பேட்ச் மருந்துகள் தடை என்று மட்டும் தான் தெரிவித்துள்ளார்கள், ஒட்டுமொத்தமாக அல்ல. நாம் ஆர்டர் கொடுத்துள்ள மருந்துகளில் அவர்கள் சொல்லி இருக்கும் இந்த 53 வகையான மருந்துகள் இல்லை” என்றார்.