புதுக்கோட்டையை சேர்ந்த அதிமுக பிரமுகரும், சமூக ஆர்வலருமான ஜெகபர் அலி, கனிம வளம் கொள்ளை குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு மனு கொடுத்து வந்த நிலையில் கடந்த 17ம் தேதி லாரி மோதியதில் உயிரிழந்தார். இதை போலீசார் கொலை வழக்காக பதிவு செய்த சூழலில் வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில் மெத்தனமாகச் செயல்பட்டதாக திருமயம் காவல் நிலைய ஆய்வாளர் குணசேகர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.