தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கி வருவபர் த்ரிஷா. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' 'லியோ' உள்ளிட்ட படங்களில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இதனையடுத்து வரும் பிப்.6ஆம் தேதி அஜித்துடன் நடித்த விடாமுயற்சி படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் த்ரிஷா சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கு செல்கிறார் என்ற தகவல் பரவி வந்தது. இது முற்றிலும் வதந்தியே என த்ரிஷாவின் தாயார் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.