வடகிழக்கு பருவமழை அடுத்த இரு தினங்களில் தென்னிந்திய பகுதிகளில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் இன்றும், நாளையும் (ஜன., 26, 27) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வரும் 30ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் அன்றைய தினம் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.