அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இந்நிலையில் வெளிநாடுகளுக்கு வழங்கப்பட்டு வந்த உதவியை அடுத்த 90 நாட்களுக்கு நிறுத்த உத்தரவிட்டு உள்ளார். சுகாதாரம், கல்வி, மேம்பாடு, வேலைவாய்ப்பு, பாதுகாப்பு உதவி உள்ளிட்ட திட்டங்களுக்காக அமெரிக்கா வழங்கி வந்த கோடிக்கணக்கான நிதி உதவியை உடனடியாக நிறுத்துமாறு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டிருப்பதால், பல நாடுகள் கவலை அடைந்துள்ளன.