ராமேஸ்வரம் மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர், 2 விசைப்படகுகளையும் சிறைபிடித்துள்ளதாக கூறப்படுகிறது. அவ்வப்போது இது போன்ற அத்துமீறலில் இலங்கை கடற்படை ஈடுபடுகிறது.