அசாம்: பத்மேஸ்வர் (71) என்ற முதியவரும், ஜெயபிரபா (65) என்ற மூதாட்டியும் முதியோர் இல்லத்தில் கடந்த ஓராண்டாக தங்கியிருந்த நிலையில் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. முக்கியமாக பத்மேஸ்வரின் பாடும் திறமை ஜெயபிரபாவை ஈர்த்தது. இதையடுத்து இரண்டு பேருக்கும் மிக அண்மையில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். பத்மேஸ்வர், ஜெயபிரபா இருவருக்கும் இது முதல் திருமணமாகும்.