கேரளா: கல்லூரி மாணவர்கள் மீது காரை ஏற்ற முயன்ற வழக்கில் யூடியூபர் முகமது ஷாஹீன் கைதானார். கொலை முயற்சி வழக்கில் கைதாகி, சிறையில் இருந்த அவரது முடி வெட்டப்பட்டது. இதனால், மன உளைச்சலுக்கு ஆளான யூடியூபர், தற்போது திருச்சூர் மருத்துவமனையில் மனநல சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமுடி சிறை நெறிமுறைகளின்படியே வெட்டப்பட்டதாக சிறை துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.