ஜியோ பாரத் 4G மொபைல் போன் கடந்த ஆண்டு ரூ.699க்கு அறிமுகமானது. இந்த போனை வைத்திருக்கும் சிறு வணிகர்கள், UPI பரிவர்த்தனை குறித்த தகவலை பெற புதிய வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. அவர்களின் போனில் ஒலி வடிவில் இனி இலவசமாக இத்தகவலை பெறும் வசதியை JIo அறிமுகம் செய்துள்ளது. தற்போது பரிவர்த்தனை ஒலிபெருக்கி சாதனத்துக்கு சிறு வணிகர்கள் மாதம் ரூ.125 வரை கட்டணம் செலுத்தும் நிலையில், ஜியோ போனில் இதனை இலவசமாக பெறலாம். இதன் வாயிலாக வணிகர்கள் ஆண்டுக்கு ரூ.1,500 சேமிக்க முடியும் எனப்படுகிறது.