சென்னை சேப்பாக்கத்தில் இந்தியா-இங்கிலாந்த் இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி இன்று (ஜன.25) நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் வைத்திருப்பவர்கள் மைதானத்திற்குச் சென்று வர மெட்ரோ, மின்சார ரயில், மாநகர பேருந்து ஆகியவற்றில் இலவசமாக பயணிக்கலாம். மேலும், இந்த போட்டியின் காரணமாக சென்னையில் இன்று மதியம் 2 மணி முதல் இரவு 11 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.