விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகாவை சார்ந்தவர் இறையன் . இவர் தனது நண்பர் செல்வ பாண்டியன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் மதுரை தூத்துக்குடி சாலையில் ராமானுஜபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது நாராயணசாமி என்பவர் ஆட்டோவை அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி வந்து இறையன் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளார்.
இதில் செல்வ பாண்டி மற்றும் இறையின் காயமடைந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.