பிரியாணியில் விஷம் வைத்து கொல்லப்படும் தெரு நாய்கள்

59பார்த்தது
பிரியாணியில் விஷம் வைத்து கொல்லப்படும் தெரு நாய்கள்
திருவள்ளூர் மாவட்டத்தில் தெரு நாய்கள் அதிகமாகிவிட்ட நிலையில், அதனை கட்டுப்படுத்த முயற்சிகள் எடுக்காமல், விஷம் வைத்து கொல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. தெரு நாய்களுக்கு விஷம் கலந்த பிரியாணியை கொடுத்ததில் அதனை சாப்பிட்டு 4 நாய்கள் உயிரிழந்துள்ளது. கடந்த ஒரு மாதமாக விஷம் கலந்த பிரியாணியை சாப்பிட்ட 50 தெரு நாய்கள் பலியான நிலையில் மேலும் 4 நாய்கள் பலியாகியுள்ளது. இந்த சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி