லெபனான் நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மீதான மீறல்களை சீனா கடுமையாக எதிர்க்கிறது. மத்திய கிழக்கில் பகைமையையும் பதட்டங்களையும் அதிகரிக்கும் எந்தவொரு நகர்வுகளையும் நாங்கள் எதிர்க்கிறோம். நிலைமை மேலும் மோசமடையாமல் தடுக்க ஆக்கப்பூர்வமாக செயல்பட சர்வதேச சமூகத்தை அழைப்பதாக சீன வெளியுறவுத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலையடுத்து சீனா இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.