2024-ம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் இன்று நிகழ உள்ளது. அக். 2-ம் தேதி இரவு 9:13 மணிக்கு கிரகணம் தொடங்கி, அக். 3-ம் தேதி வியாழக்கிழமை அதிகாலை 3:17 மணிக்கு முடிவடைகிறது. இந்த கிரகணம் மொத்தம் 6 மணி நேரம் 4 நிமிடங்கள் நீடிக்கிறது. அர்ஜென்டினா, மெக்ஸிகோ, பிரேசில், உருகுவே, நியூசிலாந்து, அமெரிக்கா போன்ற இடங்களில் முழு சூரிய கிரகணத்தை காணலாம். சூரிய கிரகணம் எப்போதும் அமாவாசை நாளிலும், சந்திர கிரகணம் எப்போதும் முழு நிலவு நாளிலும் ஏற்படுகிறது.