அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் முழுவதும் இடிக்கப்பட்டு அங்கு ரூபாய் 8 கோடி மதிப்பில் புதிதாக ஸ்மார்ட் பேருந்து நிலையம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த புதிய பேருந்து நிலையத்தில் 64 கடைகள், உணவகம், பாலூட்டும் அறை, பாதுகாவலர் அறை, டிக்கெட் கவுண்டர், கழிப்பிட வசதிகள் என பல்வேறு வசதிகளுடன் நவீன முறையில் கட்டப்பட்டு வருகிறது.
அதன் கட்டுமான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று(8. 10. 23) புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு, மண்டல நிர்வாகப் பொறியாளர் இளங்கோவன், மண்டல நிர்வாக இயக்குனர் விஜயலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
அப்போது கட்டுமான பணிகள் குறித்தும் கடைகள் எப்படி அமைய உள்ளன என்பது குறித்தும் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது
ஆணையாளர் அசோக்குமார் உள்ளிட்ட அருப்புக்கோட்டை நகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.