குடியரசுத் தலைவர் மாளிகையில் திருமணம் செய்யப் போகும் முதல் பெண் என்கிற பெருமையை பூனம் குப்தா பெறுகிறார். பிப்ரவரி 12 அவரின் திருமணம் ராஷ்டிரபதி பவனில் அன்னை தெரசா கிரவுண்ட் வளாகத்தில் நடக்கப்பட உள்ளது. ராஷ்டிரபதி பவனில் சிஆர்பிஎஃப் பணியாற்றி வரும் இவர், சிறப்பான சேவைக்காக குடியரசு தலைவர் மாளிகையிலேயே திருமணம் செய்யும் வரலாற்று வாய்ப்பினை பெற்றுள்ளார். இவரது கணவரும் ஜம்மு காஷ்மீரில் சிஆர்பிஎஃப் வீரராக பணியாற்றி வருகிறார்.