ஒரு சிறிய கிண்ணத்தில் 5 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 3 டேபிள் ஸ்பூன் சீயக்காய் எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் தண்ணீர் விட்டு பேஸ்ட் பதத்தில் நன்றாக கலக்க வேண்டும். இந்த கலவையை பாத்ரூம்களில் கறை படிந்துள்ள டைல்ஸ், பைப், தரை ஆகிய இடங்களில் ஊற்றி ஸ்க்ரப்பர் கொண்டு தேய்த்து விட வேண்டும். 10 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர், மீண்டும் ஸ்க்ரப்பர் கொண்டு நன்றாக தேய்க்க வேண்டும். இறுதியில் தண்ணீர் ஊற்றி கழுவினால் பாத்ரூம் பளிச்சென்று மாறிவிடும்.