விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் சமீபத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் அந்த கட்சியில் மொத்தம் 28 அணிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில், தகவல் தொழில்நுட்பப் பிரிவு, ஊடகப் பிரிவு, திருநங்கைகள் பிரிவு, மாற்றுத்திறனாளிகள் பிரிவு, குழந்தைகள் பிரிவு, அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் உள்ளிட்ட 28 அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.