சைனஸ் என்பது பலருக்கும் தொல்லை தரக்கூடிய ஒரு நோயாக மாறிவிட்டது. இதற்கு திருநீற்றுப்பச்சிலை நல்ல தீர்வை தருகிறது. சைனஸால் ஏற்படும் தலைவலி, ஒற்றைப் பக்க தலைவலிக்கு இந்த இலையை மருந்தாக பயன்படுத்தலாம். இந்த இலைகளை அரைத்து பசை பதத்திற்கு கொண்டு வந்து நெற்றியில் பற்று போல தடவி வைக்கலாம். வாரத்திற்கு மூன்று முறை என தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் செய்து வந்தால் சைனஸால் ஏற்படும் தலைவலி காணாமல் போய்விடும்.