ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்குகள் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. “அரசியல் சாசன நிர்ணய சபையில் ஆளுநரின் அதிகாரங்கள் என்ன? என்பதை டாக்டர்.அம்பேத்கர் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளார். மசோதாவை நிறுத்தி வைத்துவிட்டு, திருப்பி அனுப்பினாலே, ஆளுநரின் விருப்புரிமைக்கு இடமில்லை. இதுதான் அரசியலமைப்பில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது" என்று சுட்டிக்காட்டிய நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.