வேலூரை சேர்ந்த நிர்மலா (24) தனது குடும்பத்தாருடன் கர்நாடகாவில் கூலி வேலை செய்து வந்தார். நிறைமாத கர்ப்பிணியான அவர் சொந்த ஊருக்கு அரசு பேருந்தில் வந்து கொண்டிருந்த போது பிரசவ வலி ஏற்பட்டது. நிர்மலாவை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாத ஓட்டுநர், நடத்துனர் அவரை கீழே இறக்கிவிட்டு சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் ஆம்புலன்ஸிலேயே அவருக்கு குழந்தை பிறந்த நிலையில் தாயும், சேயும் நலமாக உள்ளனர்.