மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் சமூக நீதித் துறையால் நிர்வகிக்கப்படும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த விடுதியில் தங்கியுள்ள மாணவிகள் ஆன்லைனில் பீட்சா ஆர்டர் செய்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த விடுதி நிர்வாகிகள், சிறுமிகளிடம் விசாரித்துள்ளனர். அப்போது, அவர்களில் யாரும் பீட்சா ஆர்டர் செய்ததை ஒப்புக்கொள்ளவில்லை. இதனால், ஆத்திரமடைந்த நிர்வாகிகள், மாணவிகள் 4 பேரை, ஒரு மாதத்திற்கு சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்க இருப்பதாக நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.