உத்தரப் பிரதேச மாநிலம் மொரதாபாத் மாவட்டத்தில் உள்ள பரீத்பூர் கிராமத்தை சேர்ந்த ராஜ்பால் சிங் என்பவரது மகன் விபின் குமாரின் திருமணம் நேற்று நடைபெற்றது. திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்களுக்கு விருந்து வழங்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு உணவு சாப்பிட்டவர்களில் சுமார் 40 பேருக்கு வயிற்று வலி, வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டன. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.