செண்பகப்பூவில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இது உடலை வலுவடையச் செய்கிறது. செண்பகப்பூவை நிழலில் உலர்த்தி, பொடி செய்து தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். பாலியல் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்கம் குறையும். இதை கஷாயம் செய்து காலை, மாலை இருவேளை அருந்தி வந்தால் ஆண்மைக் குறைவு நீங்கும். நரம்பு தளர்ச்சி, மேக நோய்கள், நீர் சுருக்கு, சிறுநீர் எரிச்சல் போன்றவற்றை குணப்படுத்தும் சக்தியும் இதற்கு உண்டு.