விருதுநகர் மாவட்டம், சாத்துார் அருகே உள்ள பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம் ஏற்பாடு செய்திருந்த ரத்ததான முகாம் கல்லூரியில் வைத்து நடைபெற்றது. இந்த ரத்ததான முகாமிற்கு கல்லூரியின் தாளாளர் தலைமை வகிக்க, கல்லூரி இயக்குநர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர், டீன் முகாமில் கலந்து கொண்டனர்.
முகாமிற்கு தயில்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் செந்தட்டிகாளை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரத்ததானத்தின் நன்மைகளை எடுத்துரைத்தார். இந்த ரத்ததான முகாமில் 110 மாணவர்கள் ரத்தம் தானமாக வழங்கினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர், பேராசிரியர்கள், இணைந்து செய்திருந்தனர்.