முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்னும் சற்று நேரத்தில் விடுதலையாக உள்ளார். செந்தில் பாலாஜிக்கு ஜாமின் நிபந்தனையாக விதிக்கப்பட்ட இரு நபர் உத்தரவாத பிணையை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஏற்றுள்ளது. இதையடுத்து, இன்னும் சற்று நேரத்தில் புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி விடுதலையாக உள்ளார். 15 மாத சிறைவாசம் முடித்து வெளிவரும் செந்தில் பாலாஜியை வரவேற்க சிறைவாசலில் திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.