மத்தி மீனில் கால்சியம், பாஸ்பரஸ் இருப்பதால் எலும்பை வலுப்படுத்துகிறது. இதனால் மூட்டு வலி பிரச்சனைகள் வருவதில்லை. மேலும் உடலுக்கு தேவையான ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட், வைட்டமின் டி, புரோட்டீன், நல்ல கொழுப்பு, ஃபோலேட், விட்டமின் பி12, செலினியம் போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன. மத்தி மீனை தொடர்ந்து சாப்பிட்டால் பார்வை கூராகும். பார்க்க சிறியதாக இருந்தாலும் ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்ட இந்த மீனை வாரம் ஒரு முறையாவது வாங்கி சாப்பிடுங்கள்.