அருப்புக்கோட்டை மகாராணி தியேட்டர் அருகே ரயில்வே மேம்பாலத்தின் மீது கார் மீது இருசக்கர வாகன மோதி விபத்து; நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு.
அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் குமார்(42). இந்நிலையில் சுரேஷ்குமார் காரில் சொந்த வேலையாக பாளையம்பட்டியில் இருந்து அருப்புக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது மகாராணி தியேட்டர் அருகே ரயில்வே மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருக்கும்போது எதிரே அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதி காரின் முன் பகுதி சேதம் அடைந்தது. மேலும் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த சுகுமாறன் என்பவர் காயமடைந்தார். இந்த விபத்து குறித்து சுரேஷ்குமார் புகாரின் பேரில் நகர் காவல் நிலைய போலீசார் நேற்று(6. 10. 23) அஜாக்கிரதையாக இருசக்கர வாகனம் ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தியதாக சுகுமாறன் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இந்த செய்தி குறிப்பை போலீசார் இன்று(7. 10. 23) வெளியிட்டுள்ளனர்.