பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது இளைஞர் அகமது மேமன், சமூக வலைதளம் மூலம் பழக்கமான அமெரிக்காவைச் சேர்ந்த ஓனிஜா ஆண்ட்ரூ (32) என்பவரை காதலித்து வந்துள்ளார். ஆனால், இளைஞரின் குடும்பத்தினர் இந்த காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், ஆத்திரமடைந்த ஓனிஜா, அகமது மேமன் தன்னை திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றியதால், பாகிஸ்தான் அரசிடம் ரூ.87 லட்சம் பணம் கேட்டுள்ளார். பாகிஸ்தானிலேயே தங்க முடிவு செய்த அவர், அந்நாட்டுக்கு புதிய பேருந்துகள், டாக்ஸிகள் வாங்கி புனரமைக்கவே அந்த தொகையை கோரியதாக தெரிவித்தார்.