வந்தே பாரத் ரயில்களில் பயணிக்கும் பணியணிகள், பணம் கொடுத்து தங்களது உணவை பெற்றுக்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே நிர்வாகி கூறுகையில், “வந்தே பாரத் ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவின்போது, உணவு விருப்பத்தை தேர்வு செய்யாமல் பயணம் செய்கின்றனர். அந்த பயணியர் உணவு கேட்பதால் அடிக்கடி பிரச்சனை ஏற்படுகிறது. மேலும், பணம் கொடுத்தும் ஐஆர்சிடிசி ஊழியர்கள் உணவு தர மறுப்பதாக பயணியரிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் வருகின்றன. ஆகையால், இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது” என்றார்.