டீ மற்றும் காபிக்கு பதிலாக, சில மாற்று பானங்களை உட்கொள்ளலாம். இவை நமது உடலுக்குத் தேவையான புத்துணர்ச்சியை அளிப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அந்த வகையில், துளசி டீ அருந்தலாம். துளசியில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இஞ்சி டீ, மஞ்சள் தூள் டீ, கிரீன் டீ போன்றவற்றை குடிப்பதால் உடலில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்க்கும் பலன் கிடைக்கும். மேலும், இவை நோய் தொற்றுகளில் இருந்து நம்மை காக்கும்.