2023-ஆம் ஆண்டில், ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் புதிய எச்.ஐ.வி. தொற்றாளர்களில் 43 வீதம் ஆண்கள் மற்றும் ஆண்களுக்கு இடையில் உடலுறவு செயற்பாடுகளில் ஈடுபடுவோர் என எச்ஐவி/எய்ட்ஸ் தொடர்பான ஐக்கிய நாடுகளின் ஒன்றிணைந்த வேலைத்திட்டமான 'UNAIDS'-னால் 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் 13-ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம் தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு தன் பாலின சேர்க்கை மற்றும் இயற்கையான உடலுறவில் ஈடுபடுபவர்கள் கெம்செக்ஸ் எனப்படும் உடலுறவுக்கு முன் போதை பொருட்களை எடுத்துக்கொள்வது எச்ஐவி உண்டாக காரணம் என கூறப்படுகிறது.