தேனி: முல்லைப் பெரியாறு அணை குறித்து கேரளா அரசும், கேரளாவில் உள்ள பல்வேறு அமைப்புகளும் தொடர்ந்து எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. மேலும், பல்வேறு அவதூறுகளையும் பரப்பி வருகின்றன. இந்த நிலையில், இதனை கண்டிக்கும் விதமாகவும், தேனி மாவட்டத்தில் உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை கேரளா அரசு அமல்படுத்த வேண்டும் எனவும், முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்க கோரிக்கை விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.