சிவகங்கை மாவட்டம் சோமநாதபுரம் காவல்நிலையத்தில் நிலத்தகராறு தொடர்பாக புகார் அளிக்க வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் தன்னை தாக்கியதாக பெண் எஸ்ஐ பிரணிதா குற்றம்சாட்டி இருந்தார். இந்நிலையில், பெண் எஸ்ஐ பிரணிதா தாக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு பொய்யானது மற்றும் மிகைப்படுத்தப்பட்டது என சிவகங்கை மாவட்ட காவல்துறை விளக்கமளித்துள்ளது.