வயதான தங்களை மருமகள் வீட்டை விட்டு வெளியில் விரட்டி விட்டதாக திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கண்ணீருடன் தம்பதியினர் புகார் மனு அளித்துள்ளனர். அவர்கள் கூறும் போது, "வீட்டுக்குள் போகவே முடியவில்லை, பூட்டை மாற்றிவிட்டு எங்களை மருமகள் துரத்திவிட்டார். மகன் இறந்த பின்னர் எங்களை மதிப்பதில்லை. அவன் எப்படி இறந்தார் என்றே தெரியவில்லை. நாங்கள் கட்டிய வீடு அது" என்றனர்.