பிரபல இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மைசூரு வளாகத்தில், புதிதாக 400 பேர் பணியில் சேர்ந்து பயிற்சிப் பெற்று வந்தனர். இந்நிலையில், அந்த 400 பயிற்சியாளர்களையும் அந்நிறுவனம் பணியிலிருந்து நீக்கியுள்ளது. இரண்டரை வருடம் காத்திருப்புக்கு பின் பணியில் சேர்ந்த அவர்கள் தொடர்ச்சியாக 3 மதிப்பீட்டு தேர்வுகளில் தோல்வியுற்றதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. “எங்களை தோல்வியடை செய்ய வேண்டும் என்பதற்காகவே தேர்வு கடினமாக இருந்தது” என பணியை இழந்தவர்கள் கூறுகின்றனர்.