நம்முடைய உடலின் மிக முக்கியமான உறுப்பாக இருக்கிறது மூளை. நம் முழு உடலையும் கட்டுப்படுத்துவதோடு, எந்த வேலையையும் செய்வதற்கு உடல் உறுப்புகளுக்கு மூளை தான் கட்டளையிடுகிறது. ஆனால், சில பழக்கங்கள் மூளையை சேதப்படுத்தும். அதன்படி மன அழுத்தம், போதுமான தூக்கமின்மை, மதுப்பழக்கம் , புகைப்பழக்கம், அதிகம் இனிப்பு சாப்பிடுவது உள்ளிட்டவற்றை தவிர்த்தாலே, மூளை நன்றாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.