ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மெல்பர்னில் இன்று (டிச. 26) தொடங்கியது. முதலில் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்த நிலையில் அந்த அணியின் அறிமுக வீரர் சாம் கான்ஸ்டாஸின் தோள்பட்டையில் வேண்டுமென்றே விராட் கோலி மோதினார். பின்னர் இருவரும் வார்த்தை போரில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஐசிசி நடத்தை விதிமுறையை மீறியதாக கோலிக்கு போட்டி கட்டணத்தில் 20% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.