சைவப் பிரியர்களுக்கு சிறந்த புரதத் தேர்வாக பனீர் உள்ளது. 100 கிராம் பனீரில் 18 கிராம் புரதம், 20 கிராம் கொழுப்பு, 1.2 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. 100 கிராம் முட்டையில் 13 கிராம் புரதம், 10 கிராம் கொழுப்பு, 1 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. முட்டையில் பனீரைக் காட்டிலும் புரதம் குறைவாக இருக்கும் போதிலும் 9 அத்தியாவசிய அமினோ அமிலங்களை உகந்த விகிதத்தில் கொண்டிருக்கின்றன. ஆனால் இவை பனீரில் காணப்படுவதில்லை. எனவே சிறந்த புரதத் தேர்விற்கு முட்டையை தேர்ந்தெடுக்கலாம்.