சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து, வள்ளுவர்கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கைது செய்யப்பட்டார். அவருடன் சேர்த்து பாஜகவினர் பலரையும் போலீசார் வலுக்கட்டாயமாக பேருந்தில் ஏற்றிக் கொண்டு சென்றனர். மாணவியை வன்கொடுமை செய்த குற்றவாளி ஞானசேகர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதில் தொடர்புடைய மற்றொரு நபரையும் கைது செய்யக்கோரி முழக்கங்களை எழுப்பினர்.