டிசம்பரில் 2வது முறையாக, இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் (IRCTC) இணையதளம் முடங்கியுள்ளது. இன்று (டிச., 26) காலை 9.47 மணியளவில் தொடங்கிய இடையூறு காரணமாக பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். பராமரிப்பு நடவடிக்கை காரணமாக, இ-டிக்கெட் சேவை கிடைக்காது. தயவு செய்து பின்னர் முயற்சிக்கவும் என இணையதளத்தில் திரையில் தோன்றுகிறது. டிச., 09 அன்று இதேபோன்ற செயலிழப்பைத் தொடர்ந்து, இணையதளம் மற்றும் மொபைல் செயலி ஆகியவை முடங்கியிருந்தது.