இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் மூன்று போட்டிகளில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா தலா ஒரு வெற்றியை பெற்றன. ஒரு போட்டி சமனில் முடிந்த நிலையில் 4வது போட்டி இன்று (டிச. 26) மெல்பர்னில் தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்துள்ளது.