அதிமுக ஒன்றும் யோக்கிமான கட்சி இல்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (டிச., 26) செய்தியாளர்களை சந்தித்த அவர், 'துணை முதலமைச்சருடன் யாரேனும் புகைப்படம் எடுப்பது சகஜம்தான். அமைச்சருக்கு சால்வை போடுபவன் எல்லாம் திமுக காரனா? வழக்கை மறைக்க திமுகவுக்கு எந்த அவசியமும் இல்லை. அதிமுக ஆட்சியில் நிர்மலா தேவி என்ற பேராசிரியை மாணவிகளை பாலியல் தொழிலில் தள்ள முயன்றார். பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம்' என்றார்.