கண்டமங்கலம்: பாரம்பரிய ஊட்டச்சத்து உணவு திருவிழா
கண்டமங்கலம் பி. டி. ஓ. , அலுவலகத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்க மகளிர் திட்டத்தின் சார்பில் வட்டார அளவிலான பாரம்பரிய ஊட்டச்சத்து உணவு திருவிழா நடந்தது. கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானிய, பாரம்பரிய உணவுகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. துவக்க விழாவில், மாநில ஊரக வாழ்வாதார வட்டார இயக்க மேலாளர் கணேசன் வரவேற்றார். கண்டமங்கலம் ஊராட்சி தலைவர் பிரியதர்ஷினி முருகன், பி. டி. ஓ. , க்கள் மணிவண்ணன், சிவக்குமார் முன்னிலை வகித்தனர். மாநில ஊரக வாழ்வாதார வட்டார இயக்க மேலாளர் கணேசன் வரவேற்றார். கண்டமங்கலம் ஒன்றிய சேர்மன் வாசன் கண்காட்சியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். மாவட்ட கவுன்சிலர் பனிமொழி செல்வரங்கம், மாவட்ட விவசாய உற்பத்தி குழு உறுப்பினர் செல்வரங்கம், துணை பி. டி. ஓ. , க்கள் உமா, காஞ்சனா, முன்னாள் ஊராட்சி தலைவர் ராமதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர். கண்காட்சியில், அற்பிசம்பாளையம் குறிஞ்சி மகளிர் குழு முதல் பரிசும், சின்ன பாபுசமுத்திரம் வெற்றி சிகரம் இரண்டாம் பரிசும், ஆழியூர் கவிக்குயில் மூன்றாம் பரிசும் பெற்றது. இக்குழுவினர் மாவட்ட அளவிலான கண்காட்சியில் இடம்பெற தகுதி பெற்றுள்ளனர். ஏற்பாடுகளை வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் அலமேலு, கவுசல்யா, ஜெயமணி, வசந்தி, ராதிகா ஆகியோர் செய்திருந்தனர்.