தவெக மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் பாஜகவை தாக்கி பேசினார். பாஜக சித்தாந்தத்தை விஜய் எதிர்ப்பது பற்றி அக்கட்சியின் நிர்வாகி நடிகை நமீதாவிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, “பேசுவது என்பது மிகவும் சுலபம், ஆனால் செயலில் இறங்குவது தான் கஷ்டம். தேர்தல் முடிவில் தான் அனைத்தும் தெரியும். யார் என்ன கிண்டல் செய்து பேசினாலும் அதை பற்றி நான் கவலைப்படவில்லை” என்றார்.